பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ள விடயம்

புதிய ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க வேண்டுமாயின் வலுவான பாராளுமன்றத்தை உருவாக்குவதற்கு வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க சிறந்த நாடாளுமன்றம் வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கடமைகளும் வேலை திட்டங்களுக்கும் ஆதரவு கிடைக்க வில்லை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தி குறித்து எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டாலும், பல ஆண்டுகளாக பதவியில் இருந்த போதும் நாட்டுக்கு எந்த சேவையும் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மல்சிரிபுர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.