பெண்களுக்கு இலவச சுகாதார சேவை வழங்கப்படும்

பொதுத்தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் பெண்களுக்கான இலவச சுகாதார வசதிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மொரட்டுவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பெண்கள் பாதுகாப்புக்காக சட்ட திருத்தம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

எவரும் பெண்களை துஷ்பிரயோகம் செய்வதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.