பெற்றெடுத்த குழந்தையின் 08 இடங்களில் கத்தியால் குத்தி கொடூர கொலை

நோர்வுட் ஜனபதய பகுதியில் தோண்டி எடுக்கப்பட்ட சிசுவின் சடலம், கத்தியால் குத்தி
கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

குறித்த சிசுவின் உடம்பில் எட்டு இடத்தில் கத்தி குத்து காயங்கள் இருந்தாக வைத்திய
நிபுனர் இநோக்கா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,

கடந்த 12ம் திகதி வெள்ளிக்கிழமை நபர் ஒருவரினால் 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பிற்கு தெரிவிக்கப்பட்டதற்கு அமைய, நடத்தப்பட்ட விசாரணை ஊடாக குறித்த சிசு புதைக்கப்பட்ட பகுதியினை நோர்வுட் பொலிஸார் இணங்கண்டனர்.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான், சட்டவைத்திய அதிகாரி, தடயவியல் பொலிஸார் ஆகியோர் அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவானின் உத்தரவிற்கு அமைய புதைக்கப்பட்டிருந்த சிசுவின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது.

தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிசுவின் தாய் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆண் சிசுவை ஈன்றெடுத்த தாய் கத்தியால் குத்தி கொலை செய்து, குழி தோண்டி புதைத்துள்ளதாக பிரேத பரிசோதனையில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சிசுவின் உடற்பகுதியில் எட்டு இடத்தில் கத்தியால் குத்தி கொலை
செய்துள்ளதாகவும், சிசுவின் வயிற்று பகுதியில் ஐந்து கத்திகுத்து
காயங்களும், கழுத்து பகுதியில் இரண்டு கத்துகுத்து காயங்களும். ஆண் உறுப்பில் கத்தியால் குத்திய உள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறிப்பு – இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள போதிலும், அது பார்ப்பதற்கு மிகவும் கடினமானவையாக இருப்பதால் இங்கு பிரசுரிக்கவில்லை என்பதை கூறிக் கொள்கின்றோம்.