பொதுஜன பெரமுனவில் அலி சப்ரிக்கு கிடைத்த முக்கிய பதவி

பொதுஜன பெரமுன முஸ்லிம் பிரிவின் தேசிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்களும், தேசிய அமைப்பாளராக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் A.L.M. உவைஸ் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (17) புதன்கிழமை பொதுஜன பெரமுன முஸ்லிம் பிரிவின் அங்கத்தவர்களிடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்வாறு இவர்கள் நியமிக்கப்பட்டனர்.

இச்சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா, ஆளுநர் M. J. M. முஸம்மில் , கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண பிரதேசபை தலைவர்கள், இம்முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் உறுப்பினர்கள் என கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.