பொதுஜன பெரமுனவுடன் கூட்டமாக இணைந்து UNP கொண்ட உறுப்பினர்கள்

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோடு இணைந்த அனைவருக்கும் நானே பாதுகாப்பு வழங்குவேன் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட வேட்பாளர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து இன்று (30) 1000 ஆதரவாளர்கள் மற்றும் 8 பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோடு இணைந்து கொண்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது, மேலும் கருத்து தெரிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே, இன்றை தினம் நாவலப்பிட்டி கங்கேஹில கோரளை பிரதேச சபையில் இருந்து ஐக்கிய தேசிய கட்சியின் எட்டு உறுப்பினர்களும் ஆதரவாளர்கள் 1000 பேரும் எம்மோடு இணைந்து கொண்டனர்.

இவர்கள் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியில் தான் இருந்தார்கள் இவர்களுடைய தாய் தந்தையர்கள் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியில் தான் இருந்தார்கள்.

ஏன் இவர்கள் வந்தார்கள் என்றால் ஐக்கிய தேசிய கட்சி இவர்களுக்கு இதுவரை காலமும் எவ்வித அபிவிருத்திகளையும் மேற்கொண்டதில்லை என்று கூறியுள்ளார்.