மத்திய வங்கி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள முக்கிய ஆலோசனை

நெருக்கடியில் உள்ள ETI நிதி நிறுவனம் மற்றும் தி ஃபைனான்ஸ் நிறுவனம் தொடர்பில் சட்ட ஆலோசனை பெறவும், வைப்புத் தொகையாளர்களுக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்குமாறு மத்திய வங்கி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி செயலகம், மத்திய வங்கி, திறைசேரி மற்றும் வைப்புத்தொகையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குழுவை அமைத்து நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.