மத வழிபாட்டு தலங்கள் இன்று முதல் திறப்பு: பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விஷேட அறிவுறுத்தல்கள்

வழிபாட்டுத் தலங்களை இன்று முதல் மீள திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார பாதுகாப்புடன் சமூக இடைவெளியை பேணியவாறு எந்தவொரு வழிபாட்டுத் தலத்திலும் அனுமதிக்கப்படக்கூடியவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 50 ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும்இ சமூக இடைவெளியை பேணியவாறு 50 பேர் கூடியிருக்க இடவசதியற்ற வழிபாட்டுத் தலங்களில்இ வழமையாக அங்கு கூடியிருக்கக்கூடியவர்களின் எண்ணிக்கையிலானோரை மாத்திரமே அனுமதிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 ஐ தடுப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல் கோவையை அனைவரும் முழுமையாக பின்பற்றவேண்டிதற்கு அமையவேஇ இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.