மஹிந்தானந்தவுக்கு எதிராக மஹேலவின் மற்றொரு அதிரடி டுவீட்

விளையாட்டரங்கில் விளையாடும் 11 பேரை தவிர்த்து வெளி நபரினால் போட்டி எவ்வாறு பணத்திற்கு விற்கப்படும் என்பது புரியவில்லை என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மஹேல ஜயவர்தன மற்றும் ஓர் டுவிட்டர் பதிவின் மூலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் இறுதி போட்டி பணத்திற்காக விற்க்கப்பட்டதாக மஹிந்தானந்த அளுத்கமகே வெளியிட்ட கருத்து தொடர்பிலே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

09 ஆண்டுகள் கழித்து இந்த விடயம் தொடர்பில் பேசப்படுவது குறித்தும் மஹேல ஜயவர்தன கேள்வி எழு்பபியுள்ளார்.

இவ்வாறு 2011ம் ஆண்டு இடம்பெற்ற போட்டி விற்கப்பட்டதாக கூறப்படுமானால் அது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் அவர் தனது டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.