மஹிந்த சிறந்த நடிகர் – எதிர்க்கட்சிக்கு ஆதரவாக செயற்படுகிறார்

தேர்தல் ஆணைக்குழுவை முற்றுகையிட்டு, ஆணைக்குழுவிற்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரும், அமைச்சருமான விமல் வீரவன்ச பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எதிர்க்கட்சிக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

மஹிந்த தேசப்பிரிய நாட்டின் சிறந்த “நடிகர்களில்” ஒருவர் எனவும், எதிர்க்கட்சிகளுக்கு உதவுகிறார் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு முழுவதும் தேர்தல் அலுவலகங்களை அமைக்க போராடி வரும் பிளவுபட்ட எதிர்க்கட்சியை ஆதரிக்கும் வகையில், தேர்தல் ஆணைக்குழு செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மஹிந்த தேசப்பிரிய பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றார்.

ஆகையினால் தேர்தல் ஆணைக்குழுவை முற்றுகையிட்டு அந்த முயற்சியை தோற்கடிக்குமாறு பொதுமக்களை அமைச்சர் விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார்.