மஹிந்த ரஜபக்ஷ தொடர்பில் குமார வெல்கம கூறியுள்ள விடயம்

தன்னை சுற்றியுள்ள திருடர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் காரணமாகவே மகிந்த ராஜபக்ச கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தார் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

களுத்துறை – அகலவத்தை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னராவது அவர்களை ஒதுக்கி வைக்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டேன்.

2015 ஆம் ஆண்டு எதனை கொடுக்கவில்லை. நான் எனது இரண்டு கைகளால் பெண்களுக்கு கைக்கடிகாரங்களை வழங்கினேன். சில் துணிகளை வழங்கினோம். எண்ணிப் பார்க்கும் நாங்கள் தோல்வியடைந்து விட்டோம்.

சார் உங்களை சுற்றியுள்ள திருடர்களை மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டாம் என நான் கூறினேன்.

குடும்பத்தினரை சற்று ஒதுக்கி வையுங்கள் என்றும் கூறினேன். தோல்விக்கு இவை தான் காரணம்.

விசர்த்தனமான வேலைகளை செய்ததால், 2015 ஆம் தோல்வியடைந்தார் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.