மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

மினுவாங்கொடை பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொனாகோவில் ராஜா என்ற பிரபல பாதாள உலக குழு உறுப்பினராக கருதப்படும் நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் அண்மையில் மொரட்டுவ, சொய்சாபுர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.