மியன்மார், தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளை முஸ்லிம் நாடுகளாக்கும் திட்டம்

மியன்மார், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை முஸ்லிம் நாடுகளாக மாற்றுவதற்கு குழுவொன்று திட்டமிட்டு செயற்பட்டுக் கொண்டிருப்பதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கூறியுள்ளார்.

மியன்மார் நாட்டு பௌத்த தேரரான அசின் விராது என்பவரை தான் சந்தித்து இருந்த போது, அவர் தன்னிடம் இந்த விடயத்தை கூறியதாக ஞானசார தேரர் கூறியுள்ளார்.

மியன்மார் நாட்டு இராணுவ உயர் அதிகாரிகளுடன் அசின் விராது நடத்திய சந்திப்பின் போது, மியன்மார் நாட்டு இராணுவ அதிகாரிகள் இந்த விடயத்தை வௌிப்படுத்தியுள்ளதாக ஞானசார தேரர் கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கும் போதே ஞானசார தேரர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த திட்டத்திற்காக அந்தக்குழு 26 மில்லியன் துருக்கிபெட்ரோ டொலர் நிதியை ஒதுக்குவதற்கும், அதற்காக இந்த நாட்டில் அதிகளவான நிலங்களை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும்

அரேபிய பாடசாலையின் 30க்கும் அதிகமான கிளைகள் இலங்கையில் செயற்பட்டு வருவதாக பொதுபலசேனா தெரிவிக்கிறது.

ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஞானசார தேரர் நேற்று ஆஜராகினார்.

இதன்போது சாட்சியம் அளித்த போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

துருக்கியில் இருந்து கிடைக்கும் நிதி உதவியின் கீழ் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மேற்பார்வையில் இந்த பாடசாலைகள் இயங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.