முஸ்லிம்களின் ஜனாசா எரிப்பு தொடர்பில் வாய்திறந்தார் பிரதமர்

ஜனாதிபதித் தோ்தலில் முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை என்று ஒருபோதும் நாங்கள் சொல்லவில்லை.

அன்றும் என்னோடு இருந்த முஸ்லிம்கள் இன்றும் என்னோடுதான் இருக்கிறாா்கள். அவா்களுக்கு எவ்வித அழுத்தங்கள் வந்தாலும் அவா்கள் என்னுடன் தான் இருக்கின்றனா்.

ஆனால் தொடா்ந்து புரியாணி வட்டிலப்பம் கிடைத்து வந்தது போகப் போக அது கிடைக்காமல் குறைந்துவிடுமோ என்றுதான் என்னத் தேன்றுகின்றது.

மேற்கண்டவாறு தெகிவளை சகரான் மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமா் மகிந்த ராஜபக்ச தெரவித்தாா்இ

தொடா்ந்து அவா் அங்கு உரையாற்றுகையில்

கடந்த கால நல்லாட்சியில் நாட்டில் எவ்வித அபிவிருத்தியும் ஏற்படவில்லை. ஜனாதிபதி ஒரு பக்கம் இழுத்தடிப்பு பிரதமா் ரணில் ஒரு பக்கமென இழுத்தடிப்புக்கள் தான் நடைபெற்றன.

ஆனால் நாட்டில் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிட்டவில்லை.

முஸ்லிம்களது கொரோனா நோயளிகள் இறந்தவா்களின் உடலை புதைப்பதா அல்லது பற்றவைப்பதா என்ற பிரச்சினை எழுந்தது.

அலி சப்றி தலைமையில் சில முஸ்லிம் குழு வொன்று இது பற்றி என்னைச் சந்தித்து பேசினாா்கள்.

அதனை நான் சுகாதார அமைச்சா் பவித்திரா வண்னியராச்சி மற்றும் வைத்திய அதிகாரிகள் விஞ்ஞானிகள் கூட்டி அவா்களது தகவல் அறிக்கையின் படியே அது நடைபெற்றது.

அவா்கள் பற்றவைப்பதனையே சொல்லியிருந்தாா்ள். அதனை மீறி அரசியல் ரீதியாக நாங்கள் அவ்விடயத்தில் கையடிக்கவில்லை.

கொரோனா பற்றி மிகவும் கட்டுபாடாக இருந்தமையில் தான் நாம் தற்போது அந் நோயில் இருந்து தப்பியுள்ளோம் என்று உரையாற்றினார்.