முஸ்லிம் பயங்கரவாதமா விடுதலைப் புலிகளா ஆபத்தானது? கருணா கூறியுள்ள பதில்

சர்ச்சையில் சிக்கியுள்ள கருணா அம்மானிடம், முஸ்லிம் பயங்கரவாதமா அல்லது விடுதலைப் புலிகளா ஆபத்தானது என்று கேட்கப்பட்டதற்கு விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் நியாயம் இருந்ததாக கூறியுள்ளார்.

வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும், எமக்கு உரிமை வழங்கப்பட வேண்டும் என்றே விடுதலைப் புலிகளால் கேட்கப்பட்டது.

ஆனால் முஸ்லிம் மக்களுக்கு வேண்டியது என்ன? ஐஎஸ் என்பது யார் என கருணா அம்மான் கூறியுள்ளார்.

ஞானசார தேரரின் செயற்பாடுகள் மிகவும் சரியானதே என்றும், அவரை தான் வரவேற்பதாகவும் கருணா அம்மான் கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

முஸ்லிம் அரசியல்வாதிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், எனினும் மக்கள் பாவம் என்றும் கூறியுள்ளார்.

காத்தான்குடியை எடுத்துக் கொண்டால் வரவேற்பு பலகையில் அனைத்தும் அரபு எழுத்துக்களால் இருப்பதாகவும், அதில் என்ன எழுதி இருக்கிறது என்று எவருக்கும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.