மைத்திரி மற்றும் ரணிலுக்கு எதிராக சட்டமா அதிபரின் அதிரடி உத்தரவு

மத்திய வங்கி முறிமோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் வாக்குமூலத்தை பெறுமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனை தவிர அப்போதைய அரசாங்கத்தின் முக்கியமானவர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறும் சட்டமா அதிபர் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த பணிப்புரை சட்டமா அதிபர் டப்புல டி லிவேராவினால், செயல் பொலிஸ் அதிபர் விக்கிரமரட்னவுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவை தவிர அப்போதைய பிரதமரின் ஆலோசகர் எஸ்.பாஸ்கரலிங்கம், மக்கள் வங்கியின் முன்னாள் பொது முகாமையாளர் ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.