வவுனியாவில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி – 08 கால்கள்; இரண்டு உடல்கள்

வவுனியாவில் எட்டு கால்களுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது.

வவுனியா நெடுங்கேணி நைனாமடுப் பகுதியிலேயே இவ்வாறு எட்டு கால்கள், இரண்டு உடல், ஒரு தலையுடன் குறித்த ஆட்டுக்குட்டி நேற்றைய தினம் 3 மணியளவில் பிறந்துள்ளது.

நைனாமடுப் பகுதியில் சீதாகோபால் ஆறுமுகம் எனும் அரசியல் கைதி ஒருவரின் வீட்டிலையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

2017 ஆம் ஆண்டு முதல் இவரது குடும்பம் வாழ்வாதாரத்துக்காக ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்.

இவ்வாறு வளர்க்கப்பட்ட ஆடு ஒன்றுதான் இந்த அதிசயக் குட்டியை ஈன்றுள்ளது.

அத்துடன், இந்த ஆடு கடந்த வருடம் இரண்டு குட்டிகளை இறந்த நிலையிலையே ஈன்றுள்ளது.

இதேவேளை, குறித்த ஆட்டுக்குட்டியின் உடல் நிலை ஆரம்பத்தில் சீராக காணப்பட்டாலும் இன்று ஆபத்தான கட்டத்திலே இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இருப்பினும் இந்த ஆட்டுகுட்டி தற்பொழுது தண்ணீர் மற்றும் உணவு உண்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த அதிசய ஆட்டுக்குட்டியை பார்வையிடுவதற்காக அந்தப் பகுதியில் உள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.