விமலின் ஆசை – நிறைவேறினால் நாட்டுக்கு நன்மையாம்

ரணில் – சஜித்தை விட இருமடங்கு அதிகம் வாக்குகளைப் பெற ஆசைப்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தனக்கு பன்னிரண்டு அரசியல் பிரச்சினைகள் வந்துள்ளது என விமல் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

அவர்களின் விருப்பு வாக்குகளை விட இரு மடங்கு அதிகமாகப் பெற நான் ஆசைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தன்னால் தனியாகச் செய்ய முடியாது என்றும், அது மக்களால் செய்யப்பட வேண்டியது அவ்வாறு செயற்பட்டால் நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என பொது மக்கள் கூட்டத்தின் போது இவ்வாறு தெரிவித்தார்.