ஹிஸ்புல்லாவால் நடத்தி செல்லப்பட்ட மத்ரசா தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

சந்தேகத்தின் பேரில் கைது கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவினால் கொண்டு நடத்தப்பட்டதாக கருதப்படும் முந்தலம் மத்ரஸா பாடசாலையில் பயின்ற மாணவர்களுக்கு வன்முறை நடவடிக்கைகள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்பிக்க வேண்டும் என நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

குறித்த மத்ரஸாவில் இதற்காக வன்முறை திட்டங்கள் அடங்கிய 03 புத்தகங்கள் தொடர்பில் கற்பிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இரகசிய காவல் துறை அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைக்கு இன்று கொழும்பு நீதவான் ரங்க திஸாநாயக்க அனுமதி வழங்கியுள்ளார்.

கொழும்பு கிங்ஸ்பெரி உணவகத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய சந்தேக நபரான இன்ஸாம் ஹகமட் என்பவருக்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் ஹிசா ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.