​தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ள முக்கிய தீர்மானங்கள்

அனைத்து தேர்தல் மத்திய நிலையங்களுக்கும் அமைய, ஸ்தாபிக்கப்படுகின்ற கட்சிக் காரியாலயத்திலும், வேட்பாளர்களின் படங்களையும், விருப்பு இலக்கங்களையும் காட்சிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்காதிருக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழவின் அதிகாரிகளில் பெரும்பாலானோர் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான கலந்துரையாடல், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் 4.15 அளவில் ஆரம்பமானது.

இந்தக் கலந்துரையாடலில், தேர்தலுக்கான செலவுகள், மேலதிக செலவுகள் மற்றும் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துதவதற்காக ஜனாதிபதியின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கான வழிகாட்டல்கள் குறித்து இதன்போது கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.