​பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கும் நாடுகளில் கொரோனா தாக்கம் குறைவு

இலங்கை உட்பட பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கும் நாடுகளில் கொரோனா மரணம் குறைவாக ஏற்பட்டுள்ளமை விஷேட அம்சமாக அவதானிக்க முடிந்துள்ளது என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

விஷேடமாக தேரவாத பௌத்த கொள்கையுடைய இலங்கை, தாய்லாந்து, கம்போடியா மியன்மார் ஆகிய நாடுகளில் கொரோனா மரணம் குறைவாக பதிவாகியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

பௌத்த மதக் கொள்கையுடைய பூட்டானிலும் கொரோனா மரணம் பதிவாகவில்லை என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு காரணமாக அந்த நாடுகளில் இருக்கின்ற மதக் கொள்கையே காரணமாக இருக்கும் என்று தான் எண்ணுவதாக ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

கொரோனாவின் இரண்டாவது கட்ட தாக்கம் ஏற்படுமாக இருந்தால் அதனை தமது தர்மக் கொள்கையின் ஊடாக கட்டுப்படுத்த முடியும் என்று தான் எண்ணுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொள்ளுப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.