1000 ரூபா சம்பளம் – தோட்ட கம்பனிகளுக்கு பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை

தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் சாதகமான பரிந்துரைகளை அடுத்த சில வாரங்களில் முன் வைக்குமாறு தோட்டக் கம்பனிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.

நேற்று (25) அலரி மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் தோட்ட உரிமையாளர்கள் தாராள மனப்பான்மையுடன் செயற்பட வேண்டும் என்று பிரதமர் இதன்போது கூறியுள்ளார்.

சம்பள அதிகரிப்பு தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டு சமர்பிக்கப்படுமாக இருந்தால் அடுத்த வரவு செலவுத் திட்டத்தை தீர்மானிப்பதற்கு இலகுவாக இருக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

தொழிலார் காங்கிரஸ் செயலாளர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டவர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.