STF அதிரடி – இரவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர்கள்

கொலை மற்றும் கப்பம் கோரல் தொடர்பில் கைது செய்யப்பட்ட திட்டமிப்பட்ட குற்றங்களை மேற்கொள்ளும் குழுவின் உறுப்பினர் ரன்கெட்டியா எனப்படும் விராஜ் அனுருத்தவிற்கு, ரத்மலானே ரொஹா என அறியப்படும் தெமுனி ஹெரோல்ட் ரோஹன சில்வா என்பவரே ஆயுதம் விநியோகித்துள்ளதாக காவற்துறை விஷேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

காவற்துறை விஷேட அதிரடிப்படையின் உயர் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

ரத்மலானே ரொஹாவின் குழுவிற்கு ஆதரவு வழங்கும் வகையில் ரன்கெட்டியா என்ற பாதாள உலக உறுப்பினரின் குழு பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் ரன்கெட்டியா மற்றும் அவரது சகோதரர் ராகம – மகுல்பொக்குன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சந்தேகத்துரியவர்கள் 11 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் மஹபாகே காவற்துறையிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கப்பம் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தமை தொடர்பில், புயிட்டா எனப்படும் தொன் லகித்த ரவிஷான் ஜயதிலக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் ஹங்வெல்ல – ரணால பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகத்துக்குரியவரிடமிருந்து வாள், கைத்தொலைபேசி, 5 சிம் அட்டைகள் மற்றும் ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் வெற்றுக் குண்டுகள் எனபனவும் மீட்கப்பட்டுள்ளன.