அடுத்த நான்கு நாட்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த இராணுவத் தளபதி

கந்தகாடு சிகிச்சை மற்றும் புணர்வாழ்வு மத்திய நிலையத்துடன் தொடர்புடைய அனைவரும் இனம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று காலை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நேற்று கந்தகாடு சிகிச்சை மத்திய நிலையத்தைச் சேர்ந்த ஒருவர் மாத்திரமே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்த கைதிகள் அனைவரும் இதுவரையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அதன் ஆலோசகர்கள் அனைவரும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட அதன் முடிவுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தற்போது அவர்களுடைய குடும்பத்தினர் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்தவர்களைப் பார்க்கச் சென்ற 116 பேருடன் தொடர்புடைய 378 பேரின் பரிசோதனை முடிவுகள் கிடைக்க உள்ளதாகவும் எதிர்வரும் நான்கு தினங்களும் மிகவும் தீர்மானமிக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.