அலி சப்ரியின் வாகனம் விபத்து

ஜனாதிபதி சட்டதரணி அலி சப்ரி பயணம் செய்த வாகனம் அக்கரைப்பற்று மர்க்கஸ் பள்ளிக்கு முன்னால் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கல்முனையை நோக்கி சென்ற ஜனாதிபதி சட்டதரணி அலி சப்ரியின் வாகனம் வெள்ளாமை வெட்டும் மெசினுடன் மோதுண்டதில் அலி சப்ரி பயணம் செய்த வாகனத்தின் முன் கண்ணாடி மட்டும் சேதமடைந்தது.

இதனையடுத்து அவர் இன்னுமொரு வாகனத்தில் கல்முனையை நோக்கி பயணிப்பதை அவதானிக்க முடிந்தது