இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா – அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

இலங்கையில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டது இன்றைய தினம் ஆகும்.

இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 296 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் 283 பேர் கந்தகாடு மத்திய நிலையத்தில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 13 பேர் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2450 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கை எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்படும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 6000 இற்கும் அதிகமானவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலமையின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் முகாம்களில் போதிய அளவு வசதி இல்லாத காரணத்தால் இவ்வாறு மட்டுப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.