இலங்கை கிரிக்கட் அணி தொடர்பான விசாரணை முடிவை வௌியிட்ட விசாரணை அதிகாரி

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபடவில்லை என்று விளையாட்டுத்துறையில் இடம்பெறும் மோசடிகளைத் தடுக்கும் விசேட விசாரணைப் பிரிவுத் தலைவர் தெரிவித்திருக்கின்றார்.

2011ஆம் ஆண்டு இந்திய அணியுடன் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி மோதியது.

இதில் இலங்கை அணி ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் தெரிவித்தார்.

இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து முன்னணி வீரர்களிடம் மேற்படி பிரிவு விசாரணை செய்து வருகின்றது.

இந்நிலையிலேயே குறித்த விசாரணைப் பிரிவின் தலைவர், இலங்கை அணி வீரர்கள் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபடவில்லை என்று கருத்து வெளியிட்டிருக்கின்றார்.