இலங்கை கிரிக்கட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

பிற்போடப்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டி அடுத்த வருடம் ஜூன் மாதம் இலங்கையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியாஇ பாகிஸ்தான்இ இலங்கைஇ வங்காளதேசம் உள்ளிட்ட கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டிருந்தது.

இந்த போட்டியை நடத்தும் உரிமத்தை பாகிஸ்தான் பெற்றிருந்தது. இந்தியா பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி இல்லாததால் போட்டியை பொதுவான இடத்தில் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருந்தது.

கொரோனா வைரஸ் தொற்றால் டி20 உலக கோப்பைஇ ஐபிஎல் 2020இ டி20 ஆசிய கோப்பை போட்டிகள் நடத்தப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் டி20 ஆசிய கோப்பை தொடர் ரத்து செய்யப்படுவதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது.