இளைஞர்களுக்கு சஜித் வழங்கப் போகும் முக்கிய பதவிகள்

தமது அரசாங்கத்தின் கீழ் சிறந்த நிறுவனங்களின் முக்கிய பதவிகளுக்கு இளைஞர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முக்கிய தீர்மானங்களை எடுக்கும் நிறுவனங்களில் இளைஞர்களை பங்காளர்களாக்குவது யுகத்தின் அவசியமாகும் என்று அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் இனிவரும் எந்தவொரு தேர்தலிலும் இளைஞர்கள் வேட்பாளர்களாகுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

அனைத்து தேர்தல்களிலும் 25 வீதமான இளைஞர்கள் வேட்பாளர்களாக சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.