ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தகவல் மறைத்த பொலிஸ் பரிசோதகர் கைது

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருது குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான தகவல்களை மறைத்தமை தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு குற்றவியல் பிரிவினரே குறித்த பொலிஸ் பரிசோதகரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.