ஈஸ்டர் தாக்குதல் – ஹிஸ்புல்லா தொடர்பில் வௌியான பரபரப்பு தகவல்

சஹ்ரான் தலைமையிலான குழுவினர் காத்தான்குடியில் மோட்டார் சைக்கிளில் குண்டு வைத்து வெடிக்கச் செய்த சம்பவம் குறித்த முக்கிய தகவலொன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்பாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்ட காணி முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினுடையது என்று தெரிய வந்துள்ளது.

மேற்படி குண்டு வெடிப்புச் சம்பவம் நடத்தப்பட்ட பகுதியை ஆய்வுசெய்து விசாரணை நடத்திய உப பொலிஸ் பரிசோதகர் எம்.சி.எம். மொஹமட் ஜெசிலி, ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக சாட்சியமளித்தபோது இதனைக் கூறியுள்ளார்.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் திகதி காத்தான்குடி பாலமுனை பிரதேசத்திலுள்ள காணி ஒன்றில் மோட்டார் சைக்கிளில் குண்டு பொருத்தப்பட்டு சஹ்ரான் உள்ளிட்ட கும்பல் ஒத்திகை பார்த்ததாகவும் இந்த சம்பவ தினத்தன்று தான் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப்பிரிவுக்கு பொறுப்பதிகாரியாக கடமைபுரிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு முன்னர் காத்தான்குடியில் மோட்டார் சைக்கிளில் குண்டு வைத்து வெடிக்கச் செய்யப்பட்டது.