உயிரிழந்த 10 வயது சிறுமி – மரணத்தில் சந்தேகம் வௌியிட்டுள்ள பொலிஸ்

புத்தளத்தில் 10 வயது சிறுமி ஒருவரின் மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக புத்தளம் வைத்தியசாலை காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த சிறுமி அதிக இரத்தப்போக்கு காரணமாக மரணமடைந்துள்ளார் என புத்தளம் வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….

நேற்றைய தினம் குறித்த சிறுமியை அவரது தாயார் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

தனது மகளை நாகம் சீண்டியதாக வைத்தியர்களிடம் குறித்த தாய் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிறுமிக்கு அதிதீவிர சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

எனினும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.

அதிகமான இரத்தப்போக்குதான் சிறுமியின் மரணத்திற்கு காரணம் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆனால் சிறுமியின் மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக புத்தளம் வைத்தியசாலை காவல் துறை புத்தளம் காவல் துறை பிரதான அலுவலகத்திற்கு அறிவித்துள்ளது.

இந்நிலையிலேயே சிறுமியின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதோடு, சிறுமியின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக இன்றைய தினம் அனுப்பிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சிறுமி மரணம் அதிக இரத்தப்போக்கு காரணமாக ஏற்பட்டதா, கொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் விசேட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.