எதிர்காலத்தில் ஜனாதிபதியாகப் போகும் நாமல் ராஜபக்ஷ

எதிர்காலத்தில் எப்படியும் ஒருநாள் நாமல் ராஜபஷ நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்பார் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ கூறியுள்ளார்.

அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ போன்றே மிகவும் சிறந்த முறையில் நாட்டை நிர்வாகிப்பார் என்று அவர் கூறியுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ மிகவும் திறமையானவர் என்றும், அவர் போன்ற திறமைசாலி முழு பாராளுமன்றத்திலும் எவரும் இல்லை என்று கூறியுள்ளார்.

தான் கடந்த 2010ம் ஆண்டு நாமல் ராஜபக்ஷவின் திறமையை கண்டதாகவும், தான் துரநோக்க சிந்தனையுடையவர் என்றும் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ கூறியுள்ளார்.

குருணாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.