ஐஸ்வர்யா ராய்க்கும் மகளுக்கும் திடீர் மூச்சுத் திணறல்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆகியோர் மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 13ம் திகதி ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், குறித்த இருவரும் வீட்டில் தன்மைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையிலேயே, குறித்த இருக்கும் நேற்று நள்ளிரவு முதல் மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த இருவரும் மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சான் மற்றும் அவரது தந்தை அமிதாப் பச்சான் ஆகியோரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.