ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா

இந்திய அளவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சாமானிய மக்களை தாண்டி பொலிஸார், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.​ை

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், வைத்தியசாலை சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமிதாப், அபிஷேக் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்த பிறகு அவர்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனையில் ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அவரின் மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா, ஆராத்யா என்று 4 பச்சன்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை பார்த்து பாலிவுட் பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் அமிதாப் பச்சனின் பங்களாவான ஜல்சாவுக்கு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.