ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பழிவாங்க கூடாது

இந்நாட்டில் உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலை மிகக் குறைந்த அளவிலான தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

குருணாகலையில் இடம்பெற்ற பொது பேரணியில் மேலும், தெரிவித்ததாவது,

இந்நாட்டில் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை மிகக் குறைந்த அளவிலான தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் பழிவாங்குவது பொருத்தமற்றது என அவர் தெரிவித்தார்.

“காட்போட்” பௌத்தவர்கள் தனக்கு பல்வேறு வழிகளில் தாக்கி வருவதாகவும், தான் ஒரு புனிதமான பௌத்தன் எனவும், ரணசிங்க பிரேமதாசவின் மகன் எனவும் சஜித் தெரிவித்துள்ளார்.

இனம், மதம் எதுவாக இருந்தாலும் பயங்கரவாத செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுப்படும் அனைவரையும் தூக்கிலிட நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்