கடும் எச்சரிக்கை விடுத்துள்ள அஜித் ரோஹண

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதா ஸ்தாபனத்தால் அறிவிக்கப்படும் வரை சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதல் அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இதுவரை பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்புகளை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.