கட்டாரில் கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம்

கட்டாரில் பணி செய்து கொண்டிருந்த நிலையில் கொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையர்களின் சடலங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக விமான நிலைய சுகாதார பிரிவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்கள் களினி, பியகம வீதியில், விகாரை அருகில் உள்ள பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். குறித்த மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்களாகும்.

இந்த மூவரும் ஆயுதங்களினால் தாக்கி பின்னர் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சடலங்களுடன் காணப்பட்ட ஆவணங்களில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 59 வயதுடைய தந்தையும், 55 வயதுடைய தாயும் 34 வயதுடைய மகளுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் சடலம் இன்று காலை சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

உயிரிழந்த 34 வயதுடைய பெண்ணுடன் தொழில் நிமித்தம் கட்டார் சென்ற நபரொருவர் காதல் கொண்டதாகவும், பின்னர் இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் மேற்கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.