கந்தக்காடு கொரோனா சம்பவம் – இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மற்றுமொரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் ராஜாங்கணை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, குறித்த பிரதேசத்தை சேர்ந்த 70 சிறுவர்கள் அடங்களாக 300 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

முன்னதாக மாரவில பகுதியை சேர்ந்த பெண் ஆலோசகர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா குறித்த விடயத்தை வெளியிட்டார்.