கருணா புலிகள் அமைப்பில் இருந்து விலகுவதற்கு அடித்தளமிட்ட மனைவி – வெளியான தகவல்

கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன், விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகுவதற்கான அடித்தளத்தை அவரது மனைவியே இட்டதாகவும் வேறு யாருமல்ல எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் பிரியந்த பத்திரண தெரிவித்துள்ளார்.

கருணா விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகியமை சம்பந்தமாக சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

கருணா தன்னை மீது சென்று விடுவாரோ என்று கருணா குறித்து புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்ந்தும் சந்தேகத்திலேயே இருந்தார். இதனால், கருணாவின் மனைவியை முல்லைத்தீவில் வைத்திருந்தார்.

முல்லைத்தீவில் பிரபாகரனின் ஆடம்பர வாழ்க்கையை கருணாவின் மனைவியால் காண முடிந்தது.

தனது கணவன் உட்பட புலிகளின் ஏனைய உறுப்பினர்கள் காடுகளுக்கு சென்று ஏன் கஷ்டபட வேண்டும் என்பதை உணர்ந்துக்கொண்டதால், அது பற்றி கருணா அம்மானிடம் கூறி, புலிகள் அமைப்பு பிளவுப்படுவதற்கு முதலாவது அடித்தளத்தை இட்டார்.

வரலாறு முழுவதும் பல முக்கியமான தீர்மானங்களின் பின்னால் பெண்களே இருந்துள்ளனர் எனவும் பிரியந்த பத்திரண குறிப்பிட்டுள்ளார்.

கருணா அம்மானின் மனைவி இம்முறை பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழுவில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.