கிழக்கு மாகாணத்தில் செயற்பட்ட தீவிரவாத குழுக்கள்

கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய தீவிரவாதம் மாத்திரமல்ல, இந்து தீவிரவாத குழுக்களும் செயற்பட்டதாக சாட்சியம் வழங்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த இராணுவத்தின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்

2011ஆம் ஆண்டு இஸ்லாமிய தீவிரவாதக்குழுக்களுக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் கிழக்கில் தௌஹீத் ஜமாத் மற்றும் தாருல் அதார் உட்பட்ட பல இந்து தீவிரவாதக் குழுக்களும் செயற்பட்டமையை தாம் அறிந்திருந்ததாக இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரி சாட்சியம் அளித்தார்.

எனினும் இந்து தீவிரவாதக்குழுக்களின் பெயர்களை அவர் தெரிவிக்கவில்லை.