குமார் சங்கக்காரவிடம் விசாரணை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார விளையாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடி குறித்து ஆராயும் காவல்துறை விசாரணைக் குழுவில் நாளை காலை 9 மணிக்கு முன்னிலையாகவுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மகிந்தானந்த அளுத்கமகே அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே குமார் சங்கக்கார இவ்வாறு குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

இதேவேளை இன்று புதன்கிழமை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் உப்புல் தரங்கவிடம் 2 மணிநேர விசாரணைகள் இடம்பெற்றன.