குருணாகல் நகரசபைத் தலைவரின் தலை மயிரில் கூட கை வைக்க விடமாட்டேன்

குருநாகல் மாவட்டத்தின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக தான் இருக்கும்வரை குருநாகல் நகரசபைத் தலைவரின் மயிரில்கூட கைவைக்க விட மாட்டேன் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

நகரசபைத் தலைவர் துஷார சஞ்சீவ மீது கை வைக்கும் யுகம் முடிந்துவிட்டதாக ஜோன்ஸ்டன் தெரிவித்துள்ளார். சிலர் கனவு காண்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குருநாகலில் புராதன கட்டிடம் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குருநாகல் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கருத்து வௌியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இரண்டாம் புவனேகபாகு மன்னர் பயன்படுத்திய இராஜ்ய சபை கட்டிடம் இடிக்கப்பட்ட சம்பவத்தில் குருநாகல் நகர சபைத் தலைவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நபர் ஒருவரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று கப்பம் பெற்றதாக இவர் மீது வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது.