கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியிடம் 750 துப்பாக்கிகள்

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட காவல்துறை அலுவலரிடம் (சாரதி) மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 750 துப்பாக்கிகளை காவல்துறையினர் மீட்டெடுத்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிகள் அனைத்தும் T56 ரக துப்பாக்கிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.