கையில் பணம் இருக்க வேண்டுமா? என்ன செய்ய வேண்டும்

மிக முக்கியமான விடயமானது ஒரே கட்சியின் ஜனாதிபதி மற்றும் பிரதமரை நியமிப்பதா அல்லது கையில் பணம் இருப்பதா என்பதை தீர்மானிக்க வேண்டும் என UNP தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மஹரகம தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2015 அரசாங்கத்தை கையில் எடுத்த தருணம் 50 அமைச்சர்களாவது இல்லாத போதும் பெப்ரவரி மாதம் நிறைவடையும் போது அரச ஊழியர்களுக்கு 10000 ருபாய் சம்பளம் உயர்த்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் விளைவாக நாடு முழுவதும் வர்த்தகம் அதிகரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய ஒன்று வருமானத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது செலவுகளை குறைக்க வேண்டும்.

UNP அரசாங்கம் எப்போதும் செலவுகளை குறைத்து கையில் பணத்தை சேமிக்க செய்யும் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அடுத்த பொதுத் தேர்தலில் யூ.என்.பி.க்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.