கொச்சிக்கடை பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்பு

நீர்கொழும்பு-கொச்சிக்கடை- தலுவகொடுவ பிரதேசத்தில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் வைத்திருந்த நபரொருவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் நேற்று (20) கைது செய்திருந்தனர்.

நீல் அருண பிரனாந்து என்றழைக்கப்படும் தலுகொடுவ நீல் என்பவரையே இவ்வாறு கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட போது சந்தேக நபரிடம் ஒரு விமான துப்பாக்கி, 26 ரவைகள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றையும் குறித்த அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் மேற்படி நபர் ஏதேனும் குற்றச் சம்பவங்களை மேற்கொண்டுள்ளாரா அல்லது மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.