கொரோனாவை குணப்படுத்த மற்றொரு வகை மருந்து

புதிய கொரோனா தொற்றாளர்களின் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் எரசோல் எனப்படும் சிறியளவான மருந்து தொடர்பில் பிரித்தானியாவில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான 100 தொற்றாளர்களிடையே மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 79 பேரை கடுமையான நிலைமைகளில் இருந்து குறித்த மருந்து மீட்டெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மருந்து வழங்கப்பட்ட தொற்றாளர்களில் அதிகளவானோர் முழுமையாக குணமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. எனவே இது ஏனைய மருந்துகளை விடவும் விரைவாக செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

என்.என்.ஜீ 001 என்ற பெயருடைய இது நேரடியாக நுரையீரலுக்குச் செலுத்தப்படுவதாகவும் நுரையீரலை தாக்கி வரும் கொரோனா வைரஸை இது இலகுவில் அங்கிருந்து வெளியேற்றுவதாகவும் சினர்ஜன் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை அதிகாரி ரிச்சட் மாஸ்டென் தெரிவித்துள்ளார்.