கொரோனா தொற்றாளரின் வழக்கை விசாரித்த நீதவானுக்கு ஏற்பட்ட நிலை

கம்பஹா இல 02 மாவட்ட நீதிபதி உள்ளிட்ட 08 பேர் நேற்றைய தினம் (14) முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக கம்பஹா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 06ம் திகதி கொரோனா நோயாளர் ஒருவர் குறித்த நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு ஒன்றிற்கு சாட்சியம் வழங்கியுள்ள நிலைமையிலேயே அவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஆலோசகர் ஒருவரை அழைத்து சென்ற வாகனத்தின் சாரதியாக செயற்பட்ட குறித்த நபர் கொரோனா நோயாளராக அடையாளம் காணப்பட்டது கடந்த 13ம் திகதி ஆகும்.

இதற்கமைய குறித்த நீதிமன்றத்தின் நீதிபதி உள்ளிட்ட சேவையில் ஈடுபட்ட 06 பேர் மற்றும் சட்டத்தரணி இருவரும் தன்மைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.