கொரோனா பரவல் தொடர்பில் வைத்தியர் அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ள செய்தி

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கும் அதனை அண்டிய பகுதிகளிலும் உள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 552ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 19 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் ராஜாங்கன பகுதியில் 300க்கும் மேற்பட்ட PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்தோடு ஏனைய பகுதிகளிலும் தொடர்ந்து PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் மிகச் சரியான தகவல்களை சுகாதார பிரிவினர் வெளியிட்டு வருகின்றனர்.

எனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகிவரும் உண்மைக்கு புறம்பான செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.