சஜித்தின் 20ம் இலக்கத்திலும் சின்னத்திலும் ஏற்பட்டுள்ள குழப்பம்

முன்னாள் அமைச்சர் எஸ்.டி.எஸ்.ஜயசிங்கவின் மறைவின் பின் அவரது மகள் சுனெத்ரா ரணசிங்க தந்தை வழியில் அரசியலை முன்னெடுத்துச் சென்றார்.

1994ம் ஆண்டுக்குப் முன் இராஜாங்க அமைச்சராக இருந்துள்ளார். அதன்பின் அனைத்து பாராளுமன்ற தேர்தல்களிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

தொடர்ச்சியான தோல்வியால் சுனெத்ரா அரசியலில் இருந்து ஓய்வுபெறும் நிலைக்கு வந்தார்.

செல்லா காசாக இருந்த இவருக்கு இம்முறை பாராளுமன்ற தேர்தலில் அதிஸ்டம் அடித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளராக 20ம் இலக்கத்தில் சுனெத்ரா ரணசிங்க போட்டியிடுகிறார்.

சஜித் பிரேமதாஸ டெலிபோன் சின்னத்தில் கொழும்பு மாவட்டத்தில் 20ம் இலக்கத்தில் போட்டியிடுகிறார்.

கடந்த நாட்களில் தெஹிவளை ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்திற்கு வரும் முதியவர்கள் யானை சின்னத்திற்கு புள்ளடி இட்டு 20ம் இலக்கத்திற்கு வாக்களித்தால் சஜித் வென்றுவிடுவாரா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அந்த அலுவலகத்தில் உள்ளவர்களும் ஆம் அப்படி செய்தால் சஜித் உச்சத்தில் வெல்வார் என்று உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

இந்த காலத்திலும் இப்பட்டி நடக்குமா என்று கேட்கலாம். ஆம் நடக்க வாய்ப்புண்டு. யானைக்கே வாக்களித்து பழகியவர்கள் மற்றும் தௌிவற்றவர்கள் இவ்வாறு வாக்களிக்க வாய்ப்புண்டு.

அதனால் 20ம் இலக்கத்திற்கு அளிக்கப்படும் வாக்குகள் பல சுனெத்ராவை சென்றடையும் என நம்பப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சி இம்முறை கொழும்பில் சில ஆசனங்களை வெல்லும். அதில் சுனெத்ரா முக்கிய இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லங்கா நியுஸ் வெப்