சஜித் தொடர்பில் மஹிந்தவிடம் மறைப்பாடு செய்துள்ள UNP

ஐக்கிய தேசியக் கட்சிக்குரிய பச்சை நிறத்தை சஜித் அணி தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பயன்படுத்தியமைக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று புதன்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கடிதம் மூலம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

சஜித் அணி கட்சியின் நிறம் நீலம் என்ற போதிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் பச்சை நிறத்தை அவர்கள் பிரசாரங்களில் பயன்படுத்துவது தமது கட்சிக்கு பாரிய நட்டம் ஏற்படுவதாக அக்கிலவிராஜ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.